பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அவர்கள், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை ஆதரித்து காமராஜ் நகர் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது, அவர் பகுதி தோறும் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். குறிப்பாக, லட்சிய ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு “தர்பூசணி” சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அவர் தனது பேச்சில்,
இந்த தொகுதியில் வளர்ச்சி பணிகளை விரைவாக முன்னெடுக்க வல்லவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் என்பதையும்,
மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் அவருக்கு இருப்பதையும்,
மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் மாற்று அரசியலை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதையும் வலியுறுத்தினார்.
மேலும், பொதுமக்களுடன் நட்பு சூழலில் உரையாடி, பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியோரின் கோரிக்கைகளையும் கவனமாக கேட்டறிந்தார். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்ததுடன், மலர் தூவி உற்சாக ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த பிரச்சாரத்தில் பாஜக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தொண்டர்கள் மற்றும் கூட்டணி ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வானதி சீனிவாசன் அவர்களின் நேரடி பிரச்சாரம், காமராஜ் நகர் தொகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளது
.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!