விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இயங்கி வரும் APJ அப்துல் கலாம் IAS அகாடமியில் மக்கள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் சார்பில் சமூக சேவகரும் முதுநிலை வருவாய் ஆய்வாளருமான கண்ணன் தலைமையில் மகாகவி பாரதியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் திருவருடவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், பாரதியாரின் இந்திய சுதந்திரப் போராட்ட அர்ப்பணிப்பு, தமிழ் தொண்டு, பெண் விடுதலை இன்னும் எண்ணற்ற தொண்டாற்றி மறைந்த அவரது பணிகளை நினைவு கூறும் வகையில் மாணவர்களுடன் கலந்துரையாடி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முனைவர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் .அருள்தாஸ், செஞ்சி தாலுகா திருமண மண்டப உரிமையாளர் சங்க தலைவர் சுமங்கலி பன்னீர்செல்வம் , அஞ்சலை அம்மாள் செவிலியர் கல்லூரி மாணவர்களுடன் பேராசிரியர் மலர் மற்றும் APJ அப்துல் கலாம் IAS பயிற்சி மைய மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்