July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

123 மாணவர்கள் இணைந்து 430 சதுர அடியில் உருவாக்கிய பிரம்மாண்ட காமராஜர் ஓவியம்

வியக்க வைக்கும் கழுகுப் பார்வைக் காட்சி

கோவையில் நடைபெற்ற காமராஜரின் 123-வது பிறந்த நாள் விழா விழாவில் 123 மாணவர்கள் இணைந்து ,உருவாக்கிய பிரம்மாண்ட ஓவியம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது…

கோவை மாவட்டம்,கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, பள்ளியின் 123 மாணவர்கள், 123 வெள்ளை அட்டைகளை இணைத்து, காமராஜரின் உருவப்படத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக வரைந்தனர்.

பின்னர், அந்த அனைத்து ஓவியத் துண்டுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில் நின்று பிரம்மாண்டமான காமராஜர் மெகா ஓவியத்தை உருவாக்கி காட்சிப்படுத்தினர்..

நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் காமராஜர் வேடமிட்டு நிற்க அதன் நடுவே தோன்றிய பிரம்மாண்ட காமராஜர் ஓவியம்,
மாணவர்களின் ஒருங்கிணைப்பு, துல்லியம் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தியது…

பள்ளி வளாகத்தின் மேலிருந்து பதிவு செய்யப்பட்ட கழுகுப் பார்வை (ட்ரோன்) காட்சிகளில், முழுமையான காமராஜரின் உருவம் மிகவும் நேர்த்தியாக வெளிப்பட்டது.

இந்த அசத்தலான கழுகுப் பார்வைக் காட்சிகள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. கோவை மாவட்ட செய்தியாளர் சத்யா