July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள்: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரியாதை

கிருஷ்ணகிரி, ஜூலை 15:

கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பி. முகுந்தன் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் இளையப்பன், செயற்குழு உறுப்பினர் பயாஸ் பாஷா, ஒன்றிய செயலாளர்கள் சங்கர், சந்திரசேகர், ஹரி, கோவிந்தராஜ், இணைச் செயலாளர்கள் நாகராஜ், நந்தகுமார், சண்முகம், மாதேயன், பாலா உள்ளிட்ட நகர மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.