கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. இதில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளியின் நிர்வாகம் சார்பாக இதற்கான நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக செல் வி.திவ்யா ஐபிஎஸ் மற்றும் திருமதி.சுருதி S யாரகட்டி ஐபிஎஸ் அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான போட்டிகளில் வென்ற மாணவிகளுக்குப்பரிசுகள் அளித்து பாராட்டினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் அனைத்து ஆசிரிய பெருமக்களும் செய்திருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்