July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் மருத்துவப் புரட்சி: 15-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்த ஈஸ்ட் கோஸ்ட் ஹாஸ்பிடல்ஸ்!

புதுச்சேரி, ஜூலை 4, 2026:

புதுச்சேரியின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான ஈஸ்ட் கோஸ்ட் ஹாஸ்பிடல்ஸ் (East Coast Hospitals), தனது நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை அமைப்பான “டாக்டர் ஈசி” (Dr. EC) மூலம் 15-க்கும் மேற்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், நோயாளிகளுக்குக் குறைந்த காயங்கள் மற்றும் மிகத்துல்லியமான அறுவை சிகிச்சைகளை உலகத் தரத்தில் வழங்கி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சையின் போது குறைந்த வலி மற்றும் குறைவான ரத்த இழப்பு.

மிகச்சிறிய தழும்புகள் மட்டுமே ஏற்படுதல்.

நோயாளிகள் மிக விரைவாக குணமடைதல் மற்றும் குறுகிய காலத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புதல்.
இயல்பு வாழ்க்கைக்கு விரைவாகத் திரும்புதல்.

குறிப்பாக, ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்த பல நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்த அதே நாளிலோ அல்லது அடுத்த நாளிலோ வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஈசி தொழில்நுட்பம் மூலம் துல்லியமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஹெர்னியா மற்றும் பித்தப்பை அறுவை சிகிச்சை.

புரோஸ்டேட் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைகள்.

பெருங்குடல், பொது அறுவை சிகிச்சை (General Surgery).
மகளிர் நோய் (Gynecology) மற்றும் உடல் பருமன் (Bariatric) சார்ந்த சிகிச்சைகள்.

இந்நிகழ்வில் பேசிய ஈஸ்ட் கோஸ்ட் ஹாஸ்பிடல்ஸ் இயக்குநர் டாக்டர் வெங்கட்ராம் அவர்கள் கூறுகையில், “தொழில்நுட்பம் மட்டும் அறுவை சிகிச்சையைச் செய்துவிடாது. மருத்துவரின் அனுபவம், திறமை மற்றும் சரியான மருத்துவ முடிவுகளே வெற்றியின் அடிப்படை. ‘டாக்டர் ஈசி’ மூலம் எங்கள் நிபுணர்களின் அனுபவமும், உலகத்தரம் வாய்ந்த ரோபோடிக் தொழில்நுட்பமும் இணைந்து நோயாளிகளுக்குப் பாதுகாப்பான சிகிச்சையை வழங்குகிறது. இனி புதுச்சேரி மற்றும் அண்டை மாவட்ட மக்கள், உயர்தர சிகிச்சைக்காக பெருநகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய அவசியமில்லை,” என்று தெரிவித்தார்.

தற்போது சிறுநீரக மருத்துவம், காஸ்ட்ரோ மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்த ரோபோடிக் தொழில்நுட்பம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில், மேலும் பல மருத்துவத் துறைகளில் இந்தச் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.