வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ் ரமேஷ்
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது இதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ் ரமேஷ் போட்டியிட்டார்
தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
இந்நிலையில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை ஒன்றியம் கே பெரிய பட்டி மறவனூர் மற்றும் ஆண்டவர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்
அமைச்சர் எஸ் ரமேஷ் பேசுகையில்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஒரு இளைஞனாகிய எனக்கு வாய்ப்பளித்த தமிழக வாக்காளர்கர்கள் என் மீது அதிகப்படியான நம்பிக்கையோடும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையோடு வாக்களித்தீர்கள் நீங்கள் வாக்களித்ததால் மட்டுமே இன்று நான் உங்கள் மத்தியில் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் நின்று பேசுகிறேன் இப்படிப்பட்ட வாய்ப்பை தந்த தமிழக வெற்றி கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்த தொகுதியாக இதை மாற்றிக் காட்டுவேன் நிச்சயம்.

தற்போது நாங்கள் புதியவர்கள் தான் எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் வழங்குங்கள் வாக்களித்ததற்கு நன்றி கடனாக நிச்சயம் இந்த தொகுதியில் அனைத்து அடிப்படை தேவைகளையும் படிப்படியாக நிறைவேற்றி தருவோம்
இந்த ஆட்சியில் நாங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தான் மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வருவோம் ஏனென்றால் தளபதி அவர்களின் அரசு இது மக்களுக்கான அரசு மாற்றம் தேவை என்ற ஒரே கொள்கையோடு நீங்கள் எங்களுக்கு வாக்களித்து இருக்கிறீர்கள் அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம்
உங்களின் தேவைகள் அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களை சட்டமன்ற அலுவலகத்தில் கொடுத்தால் நீங்கள் கொடுக்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தையுமே நிச்சயமாக நிறைவேற்றித் தருவோம்
மேலும் இந்த ஏழை எளிய இளைஞனை உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களில் ஒருவனாக தளபதி மேல் அன்பு கொண்டு எனக்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை பெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொண்டு வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று பேசினார்
நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ரா கதிரவன் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே சரவணன் வழக்கறிஞர் பிரிவு பிரபு பாண்டியன் மணப்பாறை நகர கழக செயலாளர் திருப்பதி அ அழகர் மாவட்ட துணை செயலாளர் தினேஷ் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் திருநாவுக்கரசு மாயவன் அம்ஜத் கான் ஜில்லா குமார் உள்ளிட்ட நிர்வாகிகள்ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கே பெரியப்பட்டியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பித்தனர்

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.