June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமாவாசை பூஜை..!

வந்தவாசி, மே 18:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை உற்சவ குழுவினர்கள் நடத்திய 12 ஆம் ஆண்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.‌ மூல மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. மதியம் தேவி பிரத்தியங்கரா மூல மந்திர ஜெப ஹோமமும், தொடர்ந்து
சுயம்வர கலா பார்வதி ஹோமமும் நடைபெற்று திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மாங்கல்யம் வழங்கப்பட்டது. மாலை ஸ்ரீமுத்துமாரி அம்மனுக்கு 32 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு ஸ்ரீ முத்துமாரியம்மன் மீனாட்சி அலங்காரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பிறகு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடந்தேறியது. உற்சவ மூர்த்தி அம்மன் கோவில் பிரகாரத்தில் மேள தாளத்துடன் வலம் வந்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அருட்சக்தி ஆறு.லட்சுமணன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.