June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மருங்காபுரி ஒன்றியத்தில்

5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் பெற்று தந்த எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என திமுக கூட்டணி வேட்பாளர் பா அப்துல் சமத் தேர்தல் பரப்புரை

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் மதச்சார்பற்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ப அப்துல் சமத் மீண்டும் களம் காண்கிறார்

தொடர்ந்து மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி துவரங்குறிச்சி உள்ளிட்ட ஒன்றியங்களில் தினம்தோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கிராமம் கிராமமாக சென்று கடந்த ஐந்து ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி திட்டங்கள் குறித்தும் செய்த சாதனைகள் குறித்தும் வாக்காளர்கள் மத்தியில் விளக்கிப் பேசி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

நேற்று மருங்காபுரி ஒன்றியம் மல்லிகைப்பட்டி தாளம்பாடி நல்லூர் சொரியம்பட்டி அதிகாரம் தெத்தூர், உசிலம்பட்டி மான் பாஞ்சான் பட்டி வடக்குப்பட்டி எம் கோவில்பட்டி பழைய பாளையம் நாட்டார் பட்டி இக்கரை கொசு குறிச்சி செவல்பட்டி காரைப்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ப அப்துல் சமத் பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் மருங்காபுரி ஒன்றியங்களில் பல்வேறு கிராமங்களில் நிழற்குடை நீர்நிலை தேக்க தொட்டி அங்கன்வாடி கிராம சாலை பாலங்கள் ரேஷன் கடை உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக சட்டமன்ற உறுப்பினராக சிறந்த முறையில் செய்து மீண்டும் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் இன்னும் பல மக்கள் நலத்திட்டங்களை மருங்காபுரி ஒன்றியங்களில் செயல்படுத்திட மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சுட்டரிக்கும் வெயிலில் வாக்காளர்கள் மத்தியில் தீவிர வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

தெத்தூர் ஊராட்சியில் தேர்தல் பரப்புரைக்கு வந்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ப அப்துல் சமத் அவர்களுக்கு பூரண கும்ப மரியாதையுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் கூட்டத்தில் குடியிருந்த மக்கள் வேட்பாளர் ப அப்துல் சமத் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு தந்தனர் மேலும் கூட்டத்தில் ஒரு பெண்மணி தோளில் சுமந்து கொண்டிருந்த குழந்தையை மகிழ்சியாக வாங்கி அதற்கு முத்தமிட்டார். மேலும் கூடியிருந்த பெண்கள் இந்த முறை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று வாக்குறுதி அளித்தனர்.