கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மத்தூர் ஒன்றிய செயலாளர் குணா வசந்தரசு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள், ஒன்றிய அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மூத்த முன்னோடிகள் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.