June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை தொகுதியில்

மக்கள் நல திட்டங்கள் பல தந்து வளர்ச்சியான தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்.

கிராமத்து பாணியில் பிரச்சாரம் செய்யும்

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ரா. கதிரவன்

தங்களது குடும்ப உறவு போல பேசுவதாக நினைத்து வியப்புடன் பார்த்த பொதுமக்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் தினம்தோறும் சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராமல் கிராமம் கிராமமாக சென்று தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா. கதிரவன் தீவிர தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்

நேற்று மருங்காபுரி ஒன்றியம் இரட்டியபட்டி தொட்டியபட்டி கோவில்பட்டி இடையபட்டி தாத கவுண்டம்பட்டி ஆமணக்கம்பட்டி வீரா கோவில் பட்டி கன்னி மேட்டுப்பட்டி கன்னி வடுகப்பட்டி சுக்காம்பட்டி நல்லமநாயக்கன்பட்டி சீல்நாயக்கன்பட்டி கார்வாடி உள்ளிட்ட50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

தேர்தல் பரப்புரைக்கு வருகை தந்த தமிழக வெற்றி கழக வேட்பாளரை சுக்காம்பட்டி எல்லையில் பொதுமக்கள் பூரண கும்ப மரியாதை உடன் பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர்.

சுக்காம்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா.கதிரவன் பேசியதாவது:

மருங்காபுரி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சனை சாலை வசதி தொடர்ந்து இருந்து வருகிறது இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இதுவரை இந்த சுக்காம்பட்டிக்கு எந்தவித அடிப்படை தேவைகளும் செய்து கொடுக்காமல் இருந்து வருகின்றனர்.

இந்த முறை இளைஞன் ஆகிய எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் நிச்சயம் சுக்காம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான டாக்டர்கள் இல்லாமல் மிருந்த சிறமத்தில் நமது மக்கள் உள்ளனர் நமது ஆட்சியில் 24 மணி நேரமும் சுழற்ச்சி முறையில் மருத்துவர்களை நியமித்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி கர்ப்பிணி தாய்மார்களுக்கு இந்த மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவை உருவாக்குவேன்

இதே போல் இந்த பகுதியில் உப்பு குடிநீர் உள்ளதால் பல்வேறு மக்களுக்கு கிட்னி சம்பந்தமான நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் நான் என் சொந்த செலவில் சுக்காம்பட்டி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவேன்

மேலும் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் கழிவறை இன்றி மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் உடனடியாக கழிவறை கட்டிக் கொடுக்கப்படும்

இதேபோல் சுக்காம்பட்டி அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இருந்து வருகின்றனர் நிச்சயம் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்ய முயற்சி மேற்கொள்வேன்

கால்நடை வளர்ப்பவர்களுக்கு வசதியாக ஆவின் பாலகம் அமைக்கப்படும்

நமது சுக்காம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி விடுதியில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மாணவ மாணவிகளை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்

ஏற்கனவே இருந்து வரும் அங்கன்வாடி கட்டிடம் மோசமடைந்துள்ள நிலையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தரப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வாக்காளர்கள் மத்தியில் வழங்கி இந்த முறை மணப்பாறைக்கு மாற்றம் தேவை எனவே மாற்றத்தை நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் மத்தியில் விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன் உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களில் ஒருவனாக ஒரு படித்த இளைஞனுக்கு நீங்கள் வாக்களித்து ஒரு முறை சட்டசபை அனுப்புங்கள் நிச்சயம் மக்களின் மனம் அறிந்து அவர்களின் தேவை அறிந்து உங்களுக்காக உழைப்பேன் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என்று விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் கதிரவனின் இந்த கிராமத்து பாணியிலான பிரச்சாரம் தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.