மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பி எல். விஜயகுமார் திங்கள் கிழமை காலை 7 மணி முதல் மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கி மதியம் 12 மணியளவில் மணப்பாறை அருள்மிகு முனியப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆரதனை நடைபெற்றுது

பின்னர் தந்தை பெரியார் சிலையிலிருந்து அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ர கலவிடம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக பொருப்பாளரும் முன்னால் எம். பி.யுமான டி.ரத்தினவேல் முன்னால் எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர் செ .
சின்னச்சாமி பாஜக மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் வேட்பாளர் டாக்டர் பி. எல். விஜயகுமார் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின் வேட்பாளர் டாக்டர் பி. எல் விஜயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பின்னர்
திறந்த வேனில் நின்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு