போராட்டத்தை கைவிட சொன்ன போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதம்.
திருச்சி மாவட்டம். மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தனி நபர்கள் சிலர் போக்குவரத்து மிகுந்த கோவில்பட்டி சாலையில் இருபுறமும் சவுக்கு நட்டு மிகப்பெரிய கொட்டகை ஒன்றை போட்டிருந்தனர். இந்த கொட்டகையால் கடுமையான போக்குவரத்து பிரச்சனை ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை அறிந்த வழக்கறிஞர் குழந்தைவேல் என்பவர், போக்குவரத்து காவல் துறை மற்றும் சட்டம் – ஒழுங்கு காவல் துறை அதிகாரிகளிடம் கொட்டகையை அகற்றச் சொல்லியுள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால், கொட்டகை அமைந்துள்ள கோவில்பட்டி சாலையின் நடுவில் சேர் போட்டு அமர்ந்தார்.
இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக, போக்குவரத்து போலீசாருக்கும், வழக்கறிஞருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்