முன்னாள் அமைச்சர் முத்துசாமி வளம் வந்த ஈரோட்டில் இனி விஜய் பாலாஜியின் ராஜ்ஜியம்..
ஈரோடு. மே. 22
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் விஜய் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள விஜய் பாலாஜிக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில் ஏற்கனவே 9 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த நிலையில், நேற்று காலை மக்கள் பவனில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக 23 பேருக்கு அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அருளைக்கர்.
முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்ற போது மூத்த தலைவர்களாக இருந்த 9 பேர் பதவி ஏற்ற நிலையில் இந்த அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டணி மந்திரி சபையாக இனி வரும் காலங்களில் செயல்படும்.
இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஈரோட்டில் பொறுத்தவரை அமைச்சர் முத்துசாமி ஒரு தனி ஆளுமையாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் தனது தொகுதியிலும், தமிழகத்தில் திமுகவும் தோல்வி அடைந்த நிலையில். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள விஜய பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், நீ ஈரோட்டில் விஜய் பாலாஜியின் ராஜாங்கம் தான் என்று பலரும் பேசி வருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் புதியதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் விஜய் பாலாஜி ஈரோடு மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் பாலாஜி அவர்களுக்கு நீதி கதிர் எக்ஸ்பிரஸ் காலை நாளிதழ் சார்பில் நாமும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!