தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு..
ஈரோடு. மே 22
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் பாலாஜிக்கு கைத்தறித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், அந்த அமைப்பினர் முதலமைச்சருக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில், தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
அதன் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் அவருடன் அன்றைய தினம் ஒன்பது பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று அமைச்சரை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் பாலாஜிக்கு கைத்தறித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் கைத்தறித்துறை என்பதை ஈரோட்டில் வெற்றி பெறும் நபருக்கு வழங்க வேண்டும் என இந்த சங்கத்தின் சார்பில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு முன்னரே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று உள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவருக்கு கைத்தறித்துறை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், தங்களுடைய கோரிக்கையை ஏற்று ஈரோட்டில் வெற்றி பெற்றுள்ள விஜய் பாலாஜிக்கு தங்கள் கோரிக்கையான கைத்தறி துறையை ஒதுக்கீடு செய்த, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஒரு அறிக்கை மூலம் அந்த அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!