February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறையில் .காரில் கடத்தி கஞ்சா .விரட்டி பிடித்த போக்குவரத்து காவலர்கள் !

.

காரை சாலையில் விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலை ஆண்டி கவுண்டம்பட்டி அருகே போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் தினேஷ் உள்ளிட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு கார் டெல்லி பதிவு எண் னுடன் வருவதை கண்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்வெங்கடாசலம் சொகுசு காரை சோதனை செய்ய வேண்டி நிறுத்தும்படி கூறியதும் சொகுசு கார் டிரைவர் சற்று தூரம் தள்ளி வாகனத்தை நிறுத்தியுள்ளார் அப்போது காவலர் தினேஷ் வாகனத்தின் பேப்பரை காட்டும்படி கேட்டுள்ளார்பேப்பரை எடுப்பது போல் நாடகமாடிய கும்பல் திடீரென சொகுசு காரை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மணப்பாறையை நோக்கி பறந்தனர்.

சுதாரித்துக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் தினேஷ் தங்களது இருசக்கர வாகனத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்றனர். இந்நிலையில் மணப்பாறை நகரில் முக்கிய பகுதியான மணப்பாறைப்பட்டி திரும்பும் சாலை அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட கார் சற்று வேகத்தை குறைத்து செல்லும்போது காவலர் தினேஷ் தனது இரு சக்கர வாகனத்தை காரின் முன்பு நிறுத்தி காரை மடக்கினார்.

பின்னர் காரில் இருந்த டிரைவர் உட்பட 4 பேரும் காரை சாலையின் நடு பகுதியில் அப்படியே நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி ஓட்டம் எடுத்தனர்,

பின்னர் இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் மணப்பாறை காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு தகவல் தந்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை காவல்துறையினர் காரை மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து இது பற்றி மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் காவியா காவல் நிலையத்திற்கு வந்து காரை சோதனை செய்தார்.

சொகுசு காரை சோதனை செய்தபோது பண்டல் பண்டலாக கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கார் முழுவதும் சோதனை செய்து அதில் 40க்கும் மேற்பட்ட பண்டல்களில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கைப்பற்றினர்.மேலும் சொகுசு காரில் ஐந்து நம்பர் பிளேட்டுகள் உள்ளதையும் கண்டுபிடித்தனர்.

மேலும் வாகனத்தின் பதிவு எண்களை வைத்து வாகனத்தின் உரிமையாளர் யார்? எந்த ஊரைச் சார்ந்தவர்கள் ? தப்பி ஓடிய நபர்கள் யார்? என்பது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் தப்பி ஓடிய கஞ்சா கடத்தல் கும்பலை வலைபேசி தேடி வருகின்றனர்.

மணப்பாறையில் சினிமா பட பாணியில் போலீசார் மிகப்பெரிய கஞ்சா கடத்தல் கும்பலை விரட்டி சென்றது கடத்தல் கும்பல் தப்பி ஓடிய சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுமார் 2 கிலோ மீட்டர் காரை பின் தொடர்ந்து விரட்டி வந்த மணப்பாறை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் காவலர் தினேஷ் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp