அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள செம்பியக்குடி கிராமத்தில் கிராம மக்களால் 1000 கிலோவில் ஐம்பொன்னாலான சிலையை சோழப்பேரரசி செம்பியன் மாதேவிக்கு நிறுவினர். மழநாட்டை ஆட்சி செய்த கண்டராதித்த சோழனின் இரண்டாவது மனைவியான செம்பியன் மாதேவி பேரரசி சிறு வயதில் இருந்தே சிவத்தொண்டில் ஈடுபட்டு வந்தவர். உலகின் முதல் கற்றளி கட்டுமானக் கலையின் முன்னோடியாகவும் பல சிவாலயங்களை நிறுவியவராகவும் செங்கற்களில் இருந்த பல சிவாலயங்களை கருங்கற்களை கொண்டு புனரமைத்தும் வேளாண்தொழிலைப் போற்றும் விதமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலைகளை உருவாக்கியும் மாமன்னன் இராசராசன் இராசேந்திரன் அருஞ்செய சோழன் உத்தம சோழன் கண்டராதித்த சோழன் உள்ளிட்ட சோழ மாமன்னர்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் திகழ்ந்த செம்பியன் மாதேவி பிறந்த தினமான சித்திரை கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் அரசு ஆண்டுவிழாவாக கொண்டாட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தெற்காசியாவையே சோழர்களின் குடையின் கீழ் ஆட்சிபுரிய காரணமாக அமைந்த செம்பியன் மாதேவி பேரரசிக்கு மணிமண்டபம் கட்டி வருங்கால தலைமுறை அறிந்து கொள்ள செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என வரலாறு மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் மாமன்னன் இராசராசன் 1040 வது சதய விழாவை முன்னிட்டு செம்பியன் மாதேவி பேரரசிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியில் செம்பியன் மாதேவி அறக்கட்டளை நிர்வாகிகள் சிவ சண்முகவேல் , கருப்பையா, சுப்ரமணியன், ரமேஷ், செந்தில்குமார், ராஜிமோல், சசிகுமார், சுந்தர்ராஜ் திருச்சி மண்டல வரலாறு மீட்புக் குழு இணை சல்மான் ஜமீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!