புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மக்களாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும் தற்போதைய மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை நாம் கட்டமைத்து வருகிறோம்.
அந்த வகையில், மதச்சார்பற்ற கொள்கைகளில் உடன்பாடு கொண்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) கட்சி, எங்களது கூட்டணியில் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியின் தனித்தன்மையையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க நினைக்கும் பாசிச சக்திகளை முறியடிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
SDPI கட்சியின் இந்த வருகை, புதுச்சேரி சிறுபான்மை மற்றும் அணைத்து சமூக மக்களின் நலனுக்காக நாம் முன்னெடுத்து வரும் போராட்டங்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்.
வரும் காலங்களில், மாநில அந்தஸ்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக இக்கூட்டணி ஒருங்கிணைந்து வீரியத்துடன் களமிறங்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரா . சிவா
மாநில அமைப்பாளர்
புதுச்சேரி மாநிலம்.திமுக.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.