June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வழக்கறிஞர் அரவிந்த் மோகன் அலுவலகம் திறப்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்

புதுச்சேரி அரியாங்குப்பம் ஸ்ரீநிவாசா நகரில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அரவிந்த் மோகன் அவர்களின் புதிய சட்ட அலுவலகம் நேற்று (14.04.26) கோலாகலமாகத் திறக்கப்பட்டது.

இந்தத் திறப்பு விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகப் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, அரியாங்குப்பம் காங்கிரஸ் ஜோசப், மற்றும் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த காக்காயன்தோப்பு சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள்
திறப்பு விழாவில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
வழக்கறிஞர்கள் ஏ.வி. ராமலிங்கம், நாராயணகுமார்.
மருதுபாண்டி, பிரதீஷ் இருதயராஜ், கார்த்திகேயன்.
சோமசுந்தரம், பிரேம்குமார், சச்சிதானந்தம் மற்றும் அரவிந்தன். ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார் மேலும்
இந்நிகழ்வில் புதுவை மாநில தேவர் பேரவை நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பேரவைத் தலைவர் குணசிங் தலைமையில், அருணகிரி, பொற்செழியன், ராம்குமார், சங்கய்யா மற்றும் பேரவையின் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வின் இறுதியில் வழக்கறிஞர் அரவிந்த் மோகன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.