முன்னாள் அமைச்சர் தங்கமணியை வீழ்த்தி வெற்றி பெற்றதால் கிடைத்த வாய்ப்பு…
குமாரபாளையம். மே. 24
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி. விஜயலட்சுமிக்கு பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் கூடுதல் இடங்களை பெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் ச
ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.
தனி பெரும்பான்மை எண்ணிக்கைக்கு குறைவாக இருந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐ யூ எம் எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு சட்டமன்றத்தில் தனது அரசின் பெரும்பான்மையை முதலமைச்சர் ஜோசப் விஜய் நிரூபித்து காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற அன்றைய தினம் தமிழக வெற்றி கழகத்தின் மூத்த தலைவர்களாக இருந்த 9 பேர் உடன் பதவி ஏற்று கொண்டனர்.
அதன் பிறகு நேற்றைய தினம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அருளைக்கர் மக்கள் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த புதிய அமைச்சரவையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி. விஜயலட்சுமிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு, அவருக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று, அமைச்சராக இருந்து வந்த தங்கமணி, திமுக சார்பில் போட்டுவிட்ட தொழிலதிபர் சேர்மன் பாலு ஆகியோரை வீழ்த்தி, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆன நிலையில், தற்போது அமைச்சராகவும் சி விஜயலட்சுமி பொறுப்பு ஏற்று உள்ளார்.
குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினராகவும், பால்வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சர் விஜயலட்சுமி குமாரபாளையம் தொகுதியில் உள்ள பல்வேறு குறைகளை கண்டறிந்து அவைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் அவருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
புதிய அமைச்சர் சி. விஜயலட்சுமி அவர்களுக்கு நீதி கதிர் எக்ஸ்பிரஸ் காலை நாளிதழ் சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.