July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

குறிஞ்சிப்பை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் ஊர்வலம்

செஞ்சி பிப் 03
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தில் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் திருப்பணி நடைபெற்று வரும் நிலையில்
குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் பகுதியில் அமைந்துள்ள அம்மச்சார் அம்மன் திருக்கோயில் சார்பாகவும் மற்றும் பொதுமக்கள் சார்பாக வள்ளி தெய்வானை சமேத .முருகர் சிலை மற்றும் கிராம தெய்வங்கள் ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலமானது குறிஞ்சிப்பை எல்லையான நெற்களத்திலிருந்து
அம்மச்சார் அம்மன் திருக்கோயில் சார்பில் 108 வரிசை தட்டுகளுடன் மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன்
ஊர்வலம் தொடங்கி குறிஞ்சிப்பை கூட்டு சாலை வழியாக வந்து கிராமத்தில் உள் நுழைந்து வீதி வழியாக வந்து
திருக்கோவிலில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டது .
தொடர்ந்து சிவாச்சாரியார் மூலம் பூஜைகள் செய்து
தொட்டி அமைக்கப்பட்டு
தொட்டியில் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மற்றும் கிராம தேவதைகள் சிலைகளும் அமர வைத்து தண்ணீர் ஊற்றப்பட்டது.
நிகழ்ச்சியில்
அம்மச்சார் அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.