ஜனவரி -11
திருப்பூர் திமுக மத்திய மாவட்ட தெற்கு மாநகர நல்லூர் பகுதிகளுக்கு உட்பட்ட விஜயபுரத்தில் உள்ள அரசு பள்ளி 60வது ஆண்டு வைர விழா வெகு சிறப்பாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக கழக செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ விழாவினை துவக்கி வைத்து நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தார்.

மேலும் இந்த பள்ளியில் போதுமான இடவசதி இருப்பதால் விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் அரசு கல்லூரி ஒன்று அமைப்பதற்கு நடைபெறும் கிடைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்த விழாவில் 4 வது மண்டல தலைவர் கோவிந்தசாமி.
பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி, முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள்,மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து,
தலைமை ஆசிரியர் அலமேலு துர்கா தேவி. செல்வராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுரேஷ்பாபு, மேலாண்மை குழு உறுப்பினர்கள் வெங்கட் ராஜா,மகேந்திரன் கார்த்திக், உதயகுமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் மோகன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி,மாமன்ற உறுப்பினர் ஜெயசுதா பூபதி உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆசிரிய பெருமக்கள் மாணவச் செல்வங்கள் பள்ளியின் முன்னாள் இந்நாள் மாணவர் செல்வங்கள் பெருந்திரளாக பங்கேற்று இந்த வைர விழாவினை சிறப்பித்தனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்