ஜனவரி: 11
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில், திருப்பூர் பாண்டியன் நகரில் தமிழகத்தை வெல்வோம் என்கின்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது..
கூட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார்.
மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன். முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நினைவுப்பரிசு
கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக முன் னாள் தலைவருமான அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, கோவை முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை. த.மா.கா. மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், உழைவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்ல முத்து மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்தி ரன் மேடைக்கு வரும் முன், திருப்பூர் தியாகிகளின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் திருப்பரங்குன்ற விவகாரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூர்ணசந்திரனின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நயினார் நாகேந்திரனுக்கு பா.ஜனதா மகளிரணியினர் மலர் தூவி வரவேற்றனர்.
மேடைக்கு முன் அமைக்கப்பட்டு இருந்த தீபத்தூணில் இளைஞரணியினர் கொண்டு வந்த ஜோதியை நயினார் நாகேந்திரன் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்…

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்