June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி தெற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சியில் சார்பில் மனு அளிக்கப்பட்டது:

திருச்சி பிப்.5-

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தினசரி மணப்பாறை பகுதிகளில் பள்ளி குழந்தைகள் மணப்பாறை பள்ளிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் ஏராளம் அதில் ஒரு பகுதியாக மஞ்சம்பட்டி இல் இயங்கி வரும் பள்ளியில் மாணவர்களை அரசு பேருந்து திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலே இறக்கிவிட்டு செல்வதால் விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதால், நேற்று கூட ஒரு மாணவன் பேருந்தில் எற நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி இறந்து விட்டார். எனவே பேருந்தில் உரிய பேருந்து நிறுத்தத்தின் பாலத்தின் கீழ் நிற்க வேண்டி மணப்பாறை அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளரிடம் இன்று திருச்சி தெற்கு மாவட்ட தமிழர் தேசம் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் பொ துரைராஜ் மூலம் மனு அளிக்கப்பட்டது.