June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

குர்குரே பாஸ்ட் புட் ஆகியவைகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்: உலக புற்றுநோய் தின விழிப்புணர்வில் வலியுறுத்தல்..!

வந்தவாசி, பிப் 05:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை சத்யபாமா (பொறுப்பு) தலைமை தாங்கினார்‌. ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா‌.சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை த.சாந்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, இரும்பேடு நகர ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் ஜெ.ஜெயக்குமார் பங்கேற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களையும், அதிலிருந்து விடுபட வேண்டிய வழிவகை முறைகளையும் விளக்கினார். குர்குரே, பாஸ்ட் புட் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை சாப்பிட கூடாது என்று வலியுறுத்தினார்.மேலும் மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய பேச்சுப் போட்டிகள் நடைபெற்று, சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி முதுகலை ஆசிரியர் எம்.எஸ்.கார்த்திகேயன் பங்கேற்று புற்றுநோயின் அறிகுறிகள் பற்றிய கருத்துரைகளை வழங்கினார். ஆசிரியை மணிமேகலை வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் பள்ளி ஆசிரியை மேரி நன்றி கூறினார்.