June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,11/06/2026.

சேலத்தில் கஞ்சா கடத்திய தவெக நிர்வாகி உட்பட 6 இளைஞர்கள் கைது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 12.5 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில்,தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)நிர்வாகி பூபதி ராஜா உட்பட 6 இளைஞர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சங்ககிரி பகுதியில் தீவிர வாகன தணிக்கையின் போது பிடிபட்ட இவர்களிடமிருந்து 12.5 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரும் சங்ககிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரது உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, அக்கட்சியைச் சேர்ந்தவர்களே தொடர்ச்சியாகக் கொலை, திருட்டு, பணம் பறிப்பு மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் சிக்கி வருவது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கட்சித் தலைமை உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” எனத் தீவிரத் தொண்டர்களும் சமூக ஆர்வலர்களும் தற்பொழுது வலியுறுத்தி வருகின்றனர்.