June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர்,முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி,

புதுச்சேரி மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின விழா இன்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்டு,புதிய பேருந்து நிலையம்,தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை, உப்பளம், வாணரப்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் சாலை ஆட்டோ ஸ்டாண்டு மற்றும் பல்வேறு இடங்களில்
மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உடை, மோர், அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

முன்னதாக அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி அவர்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவை கொடியை ஏற்றினார். மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம் அவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்
ரயில் நிலைய அண்ணா தொழிற்சங்கப்
பேரவை ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் கண்ணன்,
செயலாளர் மதன், ஜிக்கி, செல்வம், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்