மாண்புமிகு சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு அமைச்சர் கே.ஜெகதீஸ்வரி அவர்கள், தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பாக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளராக பணியாற்றியவர். எளிமையான அணுகுமுறை, மக்களுடன் நெருக்கமாக பழகும் பண்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் உயர்ந்துள்ளவர்.
பத்திரிகைத் துறையில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கி, மக்கள் பிரச்சனைகள் மற்றும் சமூகத்தின் தேவைகளை ஆழமாக அறிந்தவர் என்ற பெருமைக்குரியவர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு, தீவிரமான மக்கள் தொடர்பு மற்றும் அர்ப்பணிப்பான பிரச்சாரத்தின் மூலம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பத்திரிகைத் துறையில் இருந்து அமைச்சரவை பொறுப்பை ஏற்கும் உயரிய நிலையை அடைந்துள்ள திருமதி கே.ஜெகதீஸ்வரி அவர்கள், மக்கள் நலன் சார்ந்த சிறப்பான ஆட்சிப் பணிகளை மேற்கொண்டு தமிழக மக்களின் மனதில் நிலைத்திட வாழ்த்துகிறோம்.

என்றும் தோழமையுடன்..
எஸ்.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு