June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த காங்கிரஸ் பிரமுகர்..

போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் விரக்தியில் எடுத்த முடிவு..

ஈரோடு. ஏப்ரல். 10

ஈரோட்டை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தனக்கு தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்காத விரக்தியில் மாற்றுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் மே 04 ஆம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் திமுக தலைமையிலான மதத்த சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிரமாக தேர்தல் பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி காங்கிரஸ் மண்டல குழு தலைவராக இருந்து வந்த, முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஏ எம் ஜாபர் சாதிக், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் விரக்தி அடைந்த அவர் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அவர் இன்று மதியம் தேர்தல் அலுவலர் அரபித் ஜெயினை நேரில் சந்தித்து தனது வேட்பு மனுவை வாபஸ் பட்டார்.

அதன் பிறகு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, காங்கிரஸ் கட்சியில் நான் சுமார் 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறேன். பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். தற்போது கூட ஈரோடு மாநகராட்சி 43 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக எனது மனைவி சபு ராமா இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு இருந்தேன். என்னுடன் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு பரிந்துரை செய்து இருந்தது.

வேட்பாளர் பட்டியலில் என்னுடன் சேர்த்து பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு யாருக்கும் தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்கவில்லை.

இதற்கிடையே தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளியூரை சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் கமிட்டி தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது.

கட்சித் தலைமையின் இந்த முடிவு எனக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் என்னை இன்று முதல் முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.