July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மே தின வாழ்த்துகள்

மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர்  மு.ஹி. ஜவாஹிருல்லா வெளியிடும் மே தின வாழ்த்து செய்தி

உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நாள் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாள். தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை உள்ளன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாச் சூழலிலும் வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணி சேர்ந்து வாழும் பன்மைத்துவ சமூக அமைப்பு கொண்ட இந்தியாவை மதத்தால், சாதியால் பிளவுபடுத்தும் மதவெறி பாசிச சக்திகள் ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன.

வேலை உத்தரவாதம், ஊதிய உயர்வு, வைப்புநிதி உள்ளிட்ட தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் யாவும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது.

உழைக்கும் தொழிலாளியின் வியர்வை உலரும் முன் அவருக்கான கூலியை வழங்கி விடுங்கள் என்பது நபிகளாரின் பொன்மொழி. உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

உழைப்பாளர் தினத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் தோள்கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்ற உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன். 
மு.ஹி.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
30/04/2026