June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஓசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு குடோனில் திடீர் தீ விபத்து : நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்

ஓசூர் ராம்நகரில் திறந்த வெளி பகுதியில் நான்கு இடத்தில் பழைய பொருட்கள் சேமிப்பு குடோன்கள் உள்ளது இதில் உசேன் (30) என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் சேமிப்பு குடோனில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து வான் உயரத்திற்கு புகை சென்றது பற்றி எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் கடுமையான வெப்பம் காணப்பட்டது

தகவல் அறிந்து சென்ற ஓசூர் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இரண்டு தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர் தீ விபத்தில் குடோனில் சேமித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பழைய பொருள்கள் எரிந்து சேதமானது தீ விபத்தை பார்ப்பதற்காக சாலையில் சென்ற பொது மக்களும் அங்கு குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு.