ஈரோடு தயா அறக்கட்டளைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு..
ஈரோடு. ஜூன். 15
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மலை கிராமங்களில் அரசு பள்ளிகளில் படித்து வரும் பழங்குடியினர் இன மாணவ, மாணவிகளுக்கு ஈரோடு தயா அறக்கட்டளையின் சார்பில் தொடர்ந்து பல்வேறு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் அந்த நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில், பர்கூர், தாளவாடி, கத்தரிமலை உள்ளிட்ட சுற்று வட்டார மலைப்பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இங்கு மலைவாழ் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தாலும், அந்த மக்களுக்கு அந்த உதவிகள் போதிய அளவில் இல்லை என்று தெரிகிறது. மேலும் அந்த மலை கிராம பழங்குடியினர் என மக்களின் குழந்தைகள் அங்குள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தப் பழங்குடியினர் மக்களுக்கும், பழங்குடியினர் மாணவ மாணவிகளுக்கும் அரசு வழங்கும் உதவிகளுக்கு மேலும் உதவியாக இருக்கும் வகையில் ஈரோடு தயா அறக்கட்டளை அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தொடர்ந்து செய்து வருகிறது.
மலைவாழ் பழங்கோட்டையினர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், அன்புள்ள அரசு பள்ளிகளில் படித்து வரும் பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வி உதவிகளையும் படிப்பிற்கான உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக்கான உபகரணங்களையும் ஈரோடு தயா அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்த உதவிகளுக்கான சேவைகளை ஈரோடு தயா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சமூக சேவகர் டாக்டர் என் எம் பிரதீப், பல்வேறு சமூக அமைப்புகளின் உதவிகளோடும், தயா அறக்கட்டளையின் மூலமாகவும் இந்த மலைவாழ் மக்களுக்கான அடிப்படை உதவிகளையும் பழங்குடியினர் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து மேற்கு மண்டலத்தில் உள்ள சுமார் 8 மாவட்டங்களிலும் இதுபோன்று மலை கிராம பழங்குடியினர் மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இதுபோன்று நலத்திட்ட உதவிகள் செய்ய அதற்குரிய முன்னெடுப்புகளையும் ஈரோடு தயா அறக்கட்டளை மூலமாக அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப் செய்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக சமுதாய அமைப்புகள் ஈரோடு தயா அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப்புக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More Stories
குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு கூட்டம்!!
உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
“விக்சித் பாரத் மற்றும் சிறந்த புதுச்சேரி உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் இளைஞர் தலைவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.