மணப்பாறை ஜமீன் கொடி குமார் சாந்தி நேரில் ஆதரவு..
ஈரோடு. ஏப்ரல் 16
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து மணப்பாறை ஜமீன் குடும்பத்தை சேர்ந்த கொடி குமார் சாந்தி தம்பதியினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து. பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் கோபிநாத் பழனியப்பன் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவரை திருச்சி மணப்பாறை ஜமீன் சாந்தி மற்றும் அவரது கணவர் ஈரோடு திமுக பிரமுகர் கொடிக்குமார் ஆகியோர் பிரச்சாரத்தில், நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத பழனியப்பனுக்கு ஆதரவாக தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மணப்பாறை ஜமீன் சாந்தி குடி குமார் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு