புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் அவர்களின் சந்திப்பு குறித்து புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மாநில தலைவர் R.L. வெங்கட்ராமன் அறிக்கை:-
புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் அவர்கள் நேரில் எனது இல்லத்திற்கு வந்து , எனது தலைமையில் புதிய கட்சி ஆரம்பித்ததை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். புதுச்சேரி அரசியலில் மூத்த அரசியல் வாதியாக இருப்பதால் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தார்.
மேலும் அவருக்கு மேதகு துணை நிலை ஆளுநர் அவர்கள் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்து 147 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் முதல்வர் ரங்கசாமி அவர்கள் அமைச்சர் ஜான்குமார் அவர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது போன்று இலாகா அமைச்சர்கள் இல்லை. இது சம்பந்தமாக இரண்டுமுறை கட்சியின் சார்பாகவும், புதுவை மாநிலத்தின் மக்கள் சார்பாகவும் ஜனநாயக ரீதியில் நான் அறிக்கை வெளியிட்டு குரல் கொடுத்தும், முதல்வர் ரங்கசாமி அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கடைசியாக கடந்த வாரம் போலி மருந்து தொழிற்சாலை சம்பந்தமாக சிபிஐ விசாரணை கோரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திய போது அமைச்சர் ஜான்குமார் அவர்களுக்கு உடனடியாக இலாகா ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அது சம்பந்தமாக பேட்டியும் கொடுத்திருந்தேன். அதற்கு அமைச்சர் ஜான்குமார் அவர்கள் என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டார்.
புதுச்சேரி இன்றைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை
மேலும் புதுச்சேரியில் இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசன செய்தோம். எதிர் கால அரசியல் நிலையில் எடுக்கவேண்டிய நிலை குறித்தும் கலந்து ஆலோசித்தோம்.
விரைவில் புதுவையில் ஒரு நல்ல அரசியல் மாற்றம் விரைவில் வரும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
R.L. வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!