June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அதீத வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒரு வார காலம் தள்ளிவைக்க வேண்டும்! புதுச்சேரி அரசுக்கு திமுக அமைப்பாளர் இரா. சிவா வலியுறுத்தல் !

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இருப்பினும், இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் வழக்கத்தை விட கடுமையான வெப்ப அலையும், அதிகப்படியான ஈரப்பதமும் (Humidity) நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பகல் நேரங்களில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் புழுக்கம் காரணமாக, சிறிய குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு (Dehydration), மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

வகுப்பறைகளில் நிலவும் கடும் வெப்பம் மாணவர்களின் கவனத்தை சிதறடித்து, கற்றல் திறனைப் பாதிக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும், பகலில் வெயிலின் தாக்கமும் மாணவர்களின் பயணத்தை மிகவும் கடினமாக்கும் சூழல் உள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, புதுச்சேரியின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, மாணவர்கள் நலன் கருதியும், மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு ம், இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பை ஜூன் 8-ஆம் தேதி வரை தள்ளிவைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.