June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசி சுகநதியை சீரமைப்பு செய்ய எக்ஸ்னோரா உலகச் சுற்றுச்சூழல் தினவிழாவில் வலியுறுத்தல்..!

வந்தவாசி, ஜூன் 07:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா வந்தவாசி சுக நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கிளை தலைவர் சு‌.தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் மலர் சாதிக், ம.ரகுபாரதி, துணைத் தலைவர்கள் பா‌.சீனிவாசன், க.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் இயக்குனர் ஜா.தமீம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் பா.இந்திரராஜன் பங்கேற்று சுற்றுச்சூழல் செயல்பாடுகளையும், நெகிழிகள் பயன்பாடுகளை குறைத்திட வலியுறுத்தியும், மேலும் பசுமை இந்தியாவை உருவாக்க அனைவரும் மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார். சுகநதியை சீரமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலைய ஓய்வு பெற்ற அதிகாரி ஆ.அரசு பங்கேற்று, சுற்றுச் சூழலின் தன்மை குறித்து கருத்துரை வழங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன் பங்கேற்று, நாமும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் விளக்க உரை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ம.சுரேஷ் பாபு, க‌.பூபாலன், கு.சதானந்தன், வந்தை பிரேம், முருகன், முருகவேல், பூபதி, சத்யமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். மேலும் சுகநதி கரை பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர் அரிதாசு ரூபாய் 1000/- செலுத்தி எக்ஸ்னோரா உறுப்பினராக சேர்ந்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இறுதியில் கிளை செயலாளர் சி.வினோத் குமார் நன்றி கூறினார்.