தொழிற்சாலை வணிகம் நிறைந்த தொகுதி யாக மாற்றுவேன்
தேர்தல் பரப்புரையில் தவெக வேட்பாளர் ரா.கதிரவன் வாக்குறுதி
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக போட்டியிடும் ரா.கதிரவன் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்
மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி துவரங்குறிச்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலில் காலை முதல் இரவு வரை தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ரா.கதிரவன் கிராமம் கிராமமாக சென்று விசில் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
வாக்கு சேகரிக்கும் இடங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் சிறப்பான வரவேற்பு தந்தனர்
வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளர் ரா.கதிரவன் பல்வேறு வாக்குறுதிகளை எடுத்துக் கூறி விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
மேலும் அவர் பேசியதாவது:
மணப்பாறை சட்டமன்ற தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டனர் தொகுதிகள் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படித்து வேலையில்லாமல் இருந்து வருகின்றனர் அவர்களுக்கு வேலை வாய்ப்பை இதுவரை எந்த கட்சியும் ஏற்படுத்தித் தரவில்லை மக்களின் அடிப்படைத் தேவைகள் எதுவும் பூர்த்தி செய்து கொடுக்கவில்லை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களின் இயக்கமாக நடத்திய போது அவர் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் அவர்கள் மேலும் படித்து உயர வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு என கல்வி ஊக்கத்தொகைகளை வழங்கி மாணவர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வந்தார் அதேபோல் மணப்பாறை தொகுதி முழுவதும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மக்களை நான் நேரில் சந்தித்து பல்வேறு கிராமங்களில் உங்களோடு உங்களாக நான் பயணித்த அனுபவம் உண்டு தற்போது நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நேர்மையான எம்எல்ஏவாக செயல்பட இந்த ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் இந்த மணப்பாறை சட்டமன்ற தொகுதியை தொழில் நிறைந்த பகுதியாகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திய தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்று வாக்காளர்கள் மத்தியில் வாக்குறுதியை வழங்கி விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டார்
தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா. கதிரவன் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும் விசில் அடித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!