திமுக வேட்பாளர் தோப்பு என். டி. வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்..
ஈரோடு. ஏப்ரல். 18
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் சுமார் 200 பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பக்கத்தில் இருந்து விலகி பெருந்துறை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தோப்பு எம்டி வெங்கடாசலம் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 200 பேருக்கும் திமுக வேட்பாளர் தோப்பு எட்டி வெங்கடாஜலம் கருப்பு சிகப்பு சால்வை அணிவித்து வரவேற்றார்.
அவர்களுக்கு திமுகவின் அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்க உடனடியாக ஏற்பாடு செய்வதாக திமுக வேட்பாளர் தோப்பு என் டி வெங்கடாஜலம் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தவர்கள், திமுக வேட்பாளர் தோப்பு என்டி வெங்கடாசலம் வெற்றிக்கு பாடுபட போவதாக தெரிவித்தனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!