June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பெண்கள் மத்தியில் பெருகும் ஆதரவு..

உற்சாகத்தில் மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் எஸ். கிருத்திகா சிவகுமார்..

ஈரோடு. ஏப்ரல். 09

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாருக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் மே04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தொகுதியின் உடன்பாடுகள் செய்து தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளது.

அதேபோல் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணி செய்து வருகிறது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியும் ஒன்று.

இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக, போதிய மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கும் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களின் மருமகள் எஸ்.. கிருத்திகா சிவக்குமார் போட்டியிடுகிறார்.

அதற்காக அவர் மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிக்க செல்லும் பாஜக வேட்பாளர் எஸ். கிருத்திகா சிவகுமாரை அன்போடு வரவேற்று ஆரத்தி எடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பாஜக வேட்பாளர் எஸ். கிருத்திகா சிவகுமாருக்கு தொகுதியில் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

பாஜக வேட்பாளர் எஸ். கிருத்திகா சிவக்குமாருக்கு ஆதரவாக பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.