June 15, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுவை :

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும் ,காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் கட்சியினருடன் இணைந்து ரத்ததானம் வழங்கினார்.

ஜூன் 14ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உயிர்களைக் காக்கும் நோக்கிலான உலக ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.தொடர்ந்து ரத்த தான நிகழ்வில் பங்கேற்ற லட்சிய ஜனநாயக கட்சித் தலைவரும் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து ரத்த தானம் அளித்தார் தொடர்ந்து ரத்ததானம் அளித்த கட்சி நிர்வாகிகளுக்கு மருத்துவமனை மருத்துவர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ரத்ததானம் அளித்ததற்கான சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்வில் லட்சிய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர்கள் டாக்டர் துரைசாமி,வழக்கறிஞர் பிரபாகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.