உழைப்பாளிகளின் உன்னதமான உழைப்பையும் உழைப்புக்கேற்ற ஊதியமும், உழைப்பாளிகள் ஒற்றுமையுடன் செயல் பட்டதால் கிடைத்த நன்மைகளையும் உலகுக்கு பறைசாற்றும் உன்னதமான தினம் தான் மே 1 உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வந்த பொதுவுடைமை கட்சித் தலைவர் சிந்தனை சிற்பி திரு.சிங்காரவேலர் அவர்களை நினைவு கூற நாம் அனைவரும் கடமை பட்டுள்ளோம். முதன் முதலில் இந்தியாவில் சென்னையில் நடந்த தொழிலாளர்கள் நல கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி 1923 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி உழைப்பாளர்கள் தினமாக அறிவித்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இது உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை மற்றும் உரிமைகளின் அடையாளமாக திகழ்கிறது. இந்த நாள் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை கொண்டாடும் நாளாக விளங்குகிறது.
இப்படி பட்ட உன்னதமான தொழிலாளர்கள் இல்லையென்றால் யார் வீட்டிலும் அடுப்பு கூட எரிய யோசனை செய்யும். ஆகவேதான் அனைத்து பிரிவினரும் மே1 தொழிலாளர் தினத்தை சிறப்பாக அரசின் விடுமுறையோடு கொண்டாடி வருகின்றனர்.
இப்படிபட்ட உன்னத உழைப்பாளிகளுக்கு ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!