புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்த்த திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தி கூட்டணியை கண்டித்து, சுதேசி மில் முதல் பழைய பேருந்து நிலையம் வரை மாபெரும் பேரணி நடைபெற்றது.இந்த பேரணிக்கு மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.மாநில மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி, மகளிர் அணி பொறுப்பாளர் ஜெயந்தி, மாநில துணைத் தலைவி ஜெயலட்சுமி மற்றும் ஆடலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வம், தீப்பாய்ந்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக் பாபு, தங்க விக்ரமன், மாநில துணைத் தலைவர்கள் பாஸ்கர், அம்மாவாசை, பழனி மாநில பொருளாளர் ராஜகணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன், அணி தலைவர்கள் பாரதி மோகன், கோவேந்தன், வில்லியனூர் மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் ,மாவட்டத் தலைவர்கள் உலகநாதன், கிருஷ்ணராஜ், அனிதா, சுகுமார், முருகதாஸ், ஊடகத்துறை தலைவர் திரு. நாகேஸ்வரன், சமூக ஊடகத் தலைவர் கார்த்திகேயன், பிரிவு இணைப் பொறுப்பாளர் வேல்முருகன் மகளிர் அணி பொதுச் செயலாளர்கள் விஜயலட்சுமி பிரியா உள்ளிட்டோர் மற்றும் தொகுதி தலைவர்கள், மற்றும் 5000 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!