வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்,புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈரம் ராஜேந்திரன் (கை சின்னம்) களம் காண்கிறார். “அரசியல் கடந்து இணைவோம்… வளர்ச்சியை நோக்கி உயர்வோம்!” என்ற முழக்கத்தோடு, தொகுதி மக்களின் நலனுக்காகப் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அவர் தனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
பெண்கள், மாணவர்கள் மற்றும் நலிந்த பிரிவினரை இலக்காகக் கொண்டு அவர் அறிவித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்.
முத்தியால்பேட்டையைச் சேர்ந்த முதலாம் தலைமுறை பட்டதாரி மாணவிகளுக்கு, அவர்களின் இளங்கலை படிப்பு முடியும் வரை மாதம் ₹1,000 ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
5 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் தரமான இலவச டியூஷன் வசதி செய்து தரப்படும்.
NEET, JEE, LDC, UDC போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தொகுதியிலேயே இலவச பிரத்யேகப் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் நலனுக்காக இலவச நேப்கின் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்படும்.
ஆண்டுக்கு 28 பெண்கள் வீதம், 5 ஆண்டுகளில் 140 பெண் தொழில்முனைவோரை உருவாக்க தலா ₹25,000 முதலீட்டு உதவித்தொகை (திரும்பச் செலுத்தத் தேவையில்லாதது) வழங்கப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர் வரிசையாக ₹5,000 நிதி உதவி வழங்கப்படும்.
தொகுதியின் முக்கிய சந்திப்புகளில் உயர்தர CCTV கேமராக்கள் மற்றும் நவீன தெருவிளக்குகள் பொருத்தப்படும்.
MLA அலுவலகத்தில் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு, புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்படும்.
தையல் மற்றும் அழகுக்கலை போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு, பெண்கள் சுயதொழில் தொடங்க வழிவகை செய்யப்படும்.
குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்குப் பெண் வழக்கறிஞர்கள் மூலம் இலவச சட்ட உதவி வழங்கப்படும்.
நச்சுத்தன்மையற்ற காய்கறிகளை விளைவிக்க, இலவச மாடித்தோட்டப் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
தெருவிளக்கு, குப்பை மேலாண்மை போன்ற அடிப்படைப் பிரச்சனைகளைத் தெரிவிக்கத் தனித் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு, 24 மணி நேரத்தில் தீர்வு உறுதி செய்யப்படும்.
முத்தியால்பேட்டை தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தி, “மாற்றத்திற்காக வாக்களியுங்கள்” என ஈரம் ராஜேந்திரன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.