புதுச்சேரி:
புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் S. ஷாகுல் ஹமீது, தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வில்லியனூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தனது நற்பெயருக்குக் கறை உண்டாக்கும் வகையில் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு, புதுச்சேரி சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் மீது குடும்ப வன்முறைப் புகார் அளிப்பதற்காக வழக்கறிஞர் ஷாகுல் ஹமீதை அணுகியுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர், தனியார் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ-வான செகு முகமது என்பவர் எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக ஷாகுல் ஹமீது நீதிமன்றத்தில் சட்டப்படி ஆஜராகி வழக்குகளைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.
வழக்கறிஞர் ஷாகுல் ஹமீது தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது:
தனது தொழில்முறை கடமையைச் செய்ததற்காகவும், தற்போது தேர்தலில் அவருக்குக் கிடைத்து வரும் மக்கள் ஆதரவைப் பொறுக்க முடியாமலும், செகு முகமதுவின் தூண்டுதலின் பேரில் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது.
உபைதுர் ரஹ்மான் மற்றும் ஹாசன் மாஸ்டர் ஆகிய நபர்கள், “Sulthan Pettai News” என்ற வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில், ஷாகுல் ஹமீதின் தனிப்பட்ட வாழ்க்கை, கல்விச் சான்றிதழ் மற்றும் தொழில் குறித்து முற்றிலும் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு “பெண் கடத்தல்” போன்ற கடுமையான பொய்க் குற்றச்சாட்டுகளையும் இவர்கள் பரப்பியுள்ளனர்.
வாக்காளர்கள் மத்தியில் தனது பெயரைக் கெடுக்கும் நோக்கில் செயல்படும் இந்த நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 66-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என ஷாகுல் ஹமீது தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
புகார் மனுவுடன் அவதூறு பரப்பப்பட்டதற்கான வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் அலைபேசி எண்களையும் அவர் ஆதாரங்களாகப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!