இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபனை.
மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் ஆணைய சிறப்பு கூட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்த பட்டோர் நல அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலர் ஜெய சித்தரா காலா தலைமை வகித்தார் தாசில்தார் சுந்தரபாண்டியன் தேர்தல் அலுவலர் வேள்ளச்சாமி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ராமசாமி அதிமுக நகர செயலாளர் பவுன் ராம்மூர்த்தி சிபிஎம் புறநகர் மாவட்ட செயர்குழு உறுப்பினர் சிதம்பரம் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி முருகன் விடுதலை சிறுத்தைகள் தெற்கு மாவட்ட செயலாளர் சக்தி உட்பட அனைத்து கட்சி கலந்து கொண்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக
” சிறப்பு தீவிரத் திருத்தம்” தற்போது அவசர நிலையில் தேவையில்லை மேலும் அதன் சரத்துக்கள் உள் நோக்கம் நிறைந்தவையாகவுள்ளது
என்று ஆட்சேபனை தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டது அந்த கடிதத்தை விளக்கி பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் த.இந்திரஜித் பேசும்போது;
அரசியல் அமைப்பு சட்டப்படி தேர்தல் ஆணையம் சுதந்திர அமைப்பாக செயல்பட்டு வந்த நிலையில் 1952 தேர்தலுக்கு பிறகு பல நல்ல சீர்திருத்தங்களை செய்து வந்திருக்கிறது சமீபகாலமாக ஒன்றிய அரசின் சார்பு அமைப்பாக செயல்படுவதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது,
தமிழ்நாட்டில் 2026 இல் தேர்தல் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் இது தேவையில்லை ஏற்கனவே இந்த சிறப்பு தேர்தல் சிறப்பு திருத்தம் மூலமாக பீகாரில் உண்மையான வாக்காளர்கள் ஏறத்தாழ 62 லட்சம் பேர் நீக்கப்பட்டு அவர்கள் உயிரோடு இருப்பது தெரியவந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்ற நிலையில் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் பல நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருக்கும் நேரத்தில் அதுவும தேர்தல் நடைபெறுகின்ற மாநிலங்களில் தமிழ்நாடு ,கேரளா ,மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மட்டும் இந்த நடவடிக்கையை அவசர அவசரமாக செய்வது ஏன்?
இந்த சீர்திருத்தம் என்பது திட்டமிட்ட செயல் ஏற்கனவே இருந்த ஆவணங்களை நீக்கிவிட்டு புதிய ஆவணங்களை கூறியிருக்கிறீர்கள் குறிப்பாக ஆதாரை கூட ஒரு ஆவணமாக குறிப்பிடவில்லை
நீதிமன்றங்கள் ஆதார் ஏற்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பிறகு அது பரிசீலனையில் உள்ளது மீதம் உள்ள ஆவனங்களில் விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களுக்கான ஆவனம் இல்லை, அதற்கு இருப்பிட சான்று வாங்கி கொடுக்கலாம் என்று இருக்கிறது,
இருப்பிட சான்று அவ்வளவு எளிதாக கிடைக்காது பிப்ரவரி மாதத்திற்குள் வாக்காளர் பட்டியலை வெளியிடப் போகிறோம் என்று சொல்லுகின்ற இந்த நேரத்தில் இருக்கின்ற இரண்டு மூன்று மாதங்களில்
தமிழ்நாட்டில் இருக்கின்ற வாக்காளர்கள் கண்டறிந்து அவ்வளவு பேருக்கும் இந்த சிறப்பு தேர்தல் திருத்தத்தை இப்பொழுது நடத்தி முடிக்க முடியாது,
வெளி மாநிலத்தில் இருக்கக்கூடிய பல வாக்காளர்களை உதாரணத்துக்கு மணப்பாறையில் 8000 மேற்பட்டோர் இருக்கிறார்கள் அவர்களையெல்லாம் மத்திய அரசினுடைய எந்த ஆவணத்தையாவது பயன்படுத்தி வாக்காளர்களாக இங்கு இறக்குமதி செய்வதற்கான தந்திரம் இதில் இருக்கிறது குறிப்பாக போஸ்டல் கார்டு அட்ரஸ் இருந்தால் கூட சேர்த்துக் கொள்ளலாம் என்று இருக்கின்றது எனவே அதை பயன்படுத்தி அவர்களை வாக்காளர் ஆக்குவதற்கான முயற்சி நடக்கலாம் தேர்தல்ல ஏதோ ஒரு மோசடி நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது
அதுமட்டுமல்ல சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாராளுமன்றத்தில் விவாதம் நிறைவு பெறாத நிலையில்,
எதிர்க்கட்சிகள் பல திருத்தங்களை முன்மொழிந்துள்ள நிலையில்
அவசர ,அவசரமாக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அமல்படுத்துவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபிக்கிறது , திருத்தங்களை ஏற்கும் வரை அல்லது அந்த திருத்தங்கள் மீது முடிவெடுக்கின்ற வரை இதை நிறுத்தி வைக்க வேண்டுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று பேசினார் அவருடன் திருச்சி புறநகர் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் தங்கராசு வையம்பட்டி ஒன்றிய துணைச்செயலாளர் ஆரோக்கியம் மருங்காபுரி ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!