திருச்சி. ஜன 11-
திருச்சி ரெட்டைவாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளி வளாகத்தில் பள்ளியின் 16வது ஆண்டு விழா (ஆரம்பப் பள்ளி) நடைபெற்றது. நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் டாக்டர். R. சக்தி கிருஷ்ணன் (உறுப்பினர் துணைவேந்தர் பாரதிதாசன் இன்சார்ஜ் கமிட்டி) மற்றும் சுவாமி. நிக்கிலேஷ்மிருதா சைதன்யா (அமிர்த விஷ்வ வித்யா பீடம், கோயம்புத்தூர்) மற்றும் பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் இசை, நாடகம் மாணவர்களால் தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது. கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளியில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஆசிரிய பெருமக்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்