ஈரோடு தனியார் மண்டபத்தில் இணைப்பு விழா கோலாகலம்…
ஈரோடு. டிச. 21
ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி இணைந்தது. இதற்கான இணைப்பு விழா நேற்று ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த ஜிகே மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி நடத்தி வந்தார்.

அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ஜி கே வாசன் அந்த கட்சியை தற்போது வழி நடத்தி வருகிறார். ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் தற்போது அங்கம் வகித்து வருகிறது.
இதன் நிலையில் காமராஜர் மக்கள் கட்சி எந்த கட்சியை நிறுவி நடத்தி வந்த தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் இணையும் விழா ஈரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது.
இரு கட்சிகளின் இணைப்பு விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் மற்றும் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இணைப்பு குறித்தும் இனி இணைந்து பணியாற்றுவது குறித்தும் இரு தலைவர்களும் இழப்பு விழாவிற்கு வந்திருந்த இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பி. யுவராஜ் உள்பட இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைப்பு விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!