பத்திரிகையாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்பட்டு, பத்திரிகையாளர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்.
பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்றுதல், பத்திரிகையாளர் நலவாரியத்தை சீரமைத்தல், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் அனைத்து தரப்பு பத்திரிகையாளர்களும் பயன்பெறும் வகையில் அமைந்திடவும், பத்திரிகைத் துறையில் தற்போது நிலவும் ஏகபோக (Monopoly) முறையை ஒழித்து சிறிய பெரிய என்ற பேதமின்றி அச்சு ஊடகம், காட்சி ஊடகம், பருவ இதழ்கள், மாவட்டம் – தாலுக்கா நிருபர்கள் என அனைவருக்கும் சமமான அங்கீகாரம் மற்றும் உரிமைகள் வழங்குதல் உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை தங்களது புதிய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
தங்களது பணிக்காலம் பத்திரிகையாளர்களின் நலனுக்கான
பொற்காலமாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பணி சிறக்க வாழ்த்தும்..
S.சரவணன்
தலைவர்
9840035480

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு