செஞ்சி, அக், 31
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்தடு சொக்கணந்தல் கிராமத்தில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தின் சாலை வழியாக மல்லாண்டி, மேல் புதுப்பட்டு, உடையந்தாங்கல், கல்தம்பட்டு என சுற்றுவட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து
பள்ளி, கல்லூரி மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் மருத்துவ அவசர தேவைக்கு பயன்படுகிறேன் முக்கிய சாலையாக உள்ளது.
15 வருடத்திற்கு முன்பாக போடப்பட்ட சாலை தற்போது பெய்துவந்த பருவ மழை காரணமாக சொக்கனந்தல் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் கூட தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் மழைநீர் கழிவு நீராக சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதை கண்டித்தும், புதிய தார் சாலை அமைக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் சேரும் சகதியுமாக மாறிய மண் சாலையில் நாற்று நட்டு நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நாற்று நடவு செய்து தங்களின் துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்