July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சியில் செயல் அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அங்கராயநல்லூர் அன்னை தெரேசா முதியோர் இல்லத்தில் சென்னையில் இயங்கி வரும் செயல் அறக்கட்டளையின் நோ பசி நோ அனாதை திட்டத்தின் கீழ் அறக்கட்டளை நிறுவனர் பொன்னுசாமி கார்த்திக் ஏற்பட்டில் முதியோர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அன்னை தெரேசா முதியோர் இல்லம் நிறுவனர் நளினி அனைவரையும் வரவேற்றார்.

செயல் அறக்கட்டளை நிறுவனர் பொன்னுசாமி கார்த்திக் தாய் கவிதாஅண்ணாதுரை கலந்து கொண்டு 60 முதியோர்களுக்கு அரிசி வழங்கினார்.

நிகழ்ச்சியில்
செயல் அறக்கட்டளை ஊழியர்கள் அன்னை தெரேசா முதியோர் இல்லம் ஊழியர்கள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டனர்.